×

சிவசேனாகட்சி வலியுறுத்தல் மாதிரவேளூரில் நிவாரணம் வழங்காததை கண்டித்து விஏஓவை விவசாயிகள் சிறைபிடிப்பு

கொள்ளிடம், பிப். 17:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர்ஊராட்சியை சேர்ந்த மாதிரவேளூர், பூங்குடி,சென்னியநல்லூர்,பால் ஊரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த கனமழையால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம் கேட்டு அங்குள்ள விஏஓ விடம் விவசாயிகள் அந்தந்த நிலத்துக்குரிய சிட்டா அடங்கல் உள்ளிட்ட விவரங்களுடன் நிவாரணம் கோரி 600 விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்த 400 விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ 8000 வீதம் நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை. விவசாயிகள் முறைப்படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் நிவாரணம் கிடைக்கவில்லை.

விஏஓ மணிவேல் விவசாயிகளிடம் இருந்த பல விண்ணப்பங்களை பெற்று அதனை சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருந்த 200விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் விஏஓ மணிவேலிடம் கேட்டபோது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாதிரவேளூரில் உள்ள அலுவலகத்துக்கு விஏஓ மணிவேல் வந்தார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் தனலட்சுமிஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்து விஏஓ அலுவலகம் முன்பு அமர்ந்து விஏஓ மணி வேலை அலுவலகத்திலேயே அமரவைத்து 3 மணி நேரம் சிறைபிடித்தனர்.

இது குறித்து சீர்காழி தாசில்தார் ஹரிதரன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் சசிகலா மற்றும் ஊழியர்கள் போலீசாருடன் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர் சசிகலா விவசாயிகளிடம் கூறுகையில் விவசாயிகளின் பயனாளிகள் பட்டியல் வெளியிடவும் அதில் தவறு ஏற்பட்டிருந்தால் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும் விடுபட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதாகவும் உறுதி அளித்தார். பின்னர் விஏஓ மணி வேலை மீட்டுச் சென்றனர்.

Tags : Shiv Sena ,VOA ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை