×

நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம் சேதம்

நாகை,பிப்.17: நாகூர் அருகே பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையின் நுழைவு வாயில் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கொடிகம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் நாம்தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை உடை த்து சேதப்படுத்தியுள்ளனர். தகவல்அறிந்த நாம் தமிழர் கட்சியினர் கொடிகம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சம்பவம் குறித்து திருமருகல் ஒன்றிய துணைச் செயலாளர் பிரசாந்த் நாகூர் போலீசில் புகார் செய்தார்.

Tags : Tamil Party ,
× RELATED பாஜக-வை விட குறைந்த வாக்குகள்...