×

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி துவக்கம்

வேதாரண்யம், பிப்.17: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி கோடியக்கரை கோடியக்காடு ஆகிய இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி பெய்த மழையினால் காலதாமதமாக உப்பு உற்பத்தி செய்யும் பணிகளை உற்பத்தியாளர்கள் துவங்கினர் . உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகளான பாத்திகளை தயார் செய்தல் மண் அடித்தல் மிதித்துபக்குவபடுத்தல் போன்ற பணிகள் முடிவடைந்து உப்புபாத்தியில் தண்ணீர் தேக்கி வைத்தனர் மூன்று நாட்களுக்குபிறகு வெயிலில் உப்பு உற்பத்தியாகி நேற்று முதன் முதலாக உப்பு எடுக்கும் (பொன் உப்பு எடுத்தல்) பணி நடைபெற்றது. உப்பளங்களில் முதல் உப்புஎடுப்பதற்கு முன்பாக விநாயகர் பிடித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனைகள் காண்பித்து பின்பு உப்பு எடுக்க தொடங்கினர். வழக்கமாக ஆண்டு ஒன்றுக்கு 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் . பருவம் தவறிய மழையால் இரண்டு மாத காலமாக உப்பு உற்பத்தி தொடங்கியதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைவாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...