×

மயிலாடுதுறையில் போலீசார் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறை, பிப்.17: மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு மயிலாடுதுறை எஸ்பி நாதா உத்தரவின்பேரில் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் முன்னிலையில் எஸ்ஐஅறிவழகன் வழிநடத்த மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் மயிலாடுதுறை போலீசார் 300க்கும்மேற்பட்டோர் கொடி அணிவகுப்பை துவக்கினர். பட்டமங்கலகடைவீதி, காமராஜர்வீதி, கச்சேரி சாலை, புதிய பேருந்து நிறுத்தம் பட்டமங்கலகடைவீதி, கண்ணாரத்தெரு வழியாகச் சென்று திருவாரூர் சாலை கேணிக்கரையில் முடிவுற்றது. பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்கவும் போலீசார் எப்பொழுதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற உறுதியை ஏற்படுத்தும்விதமாக இந்தப்பேரணி நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : parade ,Mayiladuthurai ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு