×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி மாநிலம் முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6 மூலம் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ, அல்லது இணைய மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும், இதுவரை பெயர் சேர்க்காத தகுதி உள்ள நபர்கள், இந்த இறுதி வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுத்தியுள்ளது. இதன்படி புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதன்படி இன்று மாலைக்கும் பெறப்படும் விண்ணப்பங்களை மட்டுமே தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். இதன்பிறகு விண்ணப்பித்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். ஆனால் விண்ணப்பிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது. எனவே 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,Chennai ,SIR ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...