×

வாகன போக்குவரத்து அதிகரிப்பு தாந்தோணிமலை சாலையை விரிவுப்படுத்த கோரிக்கை

கரூர், பிப். 17: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே தாந்தோணிமலைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும், கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதன் காரணமாக இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து காரணமாக இந்த சாலையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே மற்ற சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதுபோல இந்த சாலையையும் விரிவாக்க செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road ,Dhanthonimalai ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...