தாந்தோணிமலை-ராயனூர் இடையே வடிகால் கட்டும் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், பிப். 17: தாந்தோணிமலை ராயனூர் இடையே நடந்து வரும் சாக்கடை வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலை குறிஞ்சி நகர் பகுதி வரை சாலையோரம் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் எளிதில் தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>