×

ரேஷன் குறைதீர் கூட்டம் பெருந்திரள் போராட்டத்தில் திரண்ட ஓய்வு போக்குவரத்து தொழிலாளர் குளித்தலையில் இன்று நடக்கவிருந்த கரூர் தாலுகா அலுவலகம் முன் பரபரப்பு

குளித்தலை, பிப்.17: குளித்தலை அருகே தெற்கு கிராமம் வாலாந்தூரில் மயான தகன மேடை, கொட்டகை, தண்ணீர், பாதை வசதி போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து. இன்று (17ம்தேதி) தாலுகா அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஒப்பாரி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி குளித்தலை தாசில்தார் முரளிதரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் துணை தாசில்தார், துறை அதிகாரிகள், போலீசார், விஏஓ, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் ராஜேந்திரன் ஊராட்சி வாலாந்தூர் கிராமத்திற்கு தற்போது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து பொக்லைன் மூலம் 2 நாட்களுக்குள் மயானம் சுத்தம் செய்து தருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்ட பணி நடந்து வருவதால் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்ட குழுவினர் இன்று நடத்துவதாக இருந்த ஒப்பாரி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

கரூர், பிப். 17: தமிழக அரசின் உத்தரவின்படி, மாதாந்திர இரண்டாவது சனிக்கிழமைகளில் நடைபெறும் பொது விநியோக திட்டம் தொடர்பான, பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 13ம்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் தலைமையில் நடைபெற்றது. முகாமில், கரூர் வட்டத்தில் 30 மனுக்கள் பெறப்பட்டு 22 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. அரவக்குறிச்சி வட்டத்தில் 7 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. புகளுர் வட்டத்தில் 8 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

குளித்தலை வட்டத்தில் 12 மனுக்கள் பெறப்பட்டு 10 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 11 மனுக்கள் பெறப்பட்டு 10 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. கடவூர் வட்டத்தில் 17 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன. மேலும், முகாமில், மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருநது கரூர் வட்டத்தில் 3 மனு பெறப்பட்டு 1 மனு தீர்வு காணப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 4 மனுக்கள் பெறப்பட்டு 2 மனு தீர்வு காணப்பட்டது. மொத்தத்தில் கரூர் மாவட்டத்தில் 99 மனுக்கள் பெறப்பட்டு 84 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags : transport workers ,Karur ,Kulithalai ,taluka office ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...