விவசாய தொழிலாளர்களின் ஒப்பாரி போராட்டம் வாபஸ் 84 மனுக்களுக்கு உடனடி தீர்வு அரவக்குறிச்சி அருகே கார் மோதி சலவை தொழிலாளி பலி

அரவக்குறிச்சி, பிப்.17: அரவக்குறிச்சி அருகே நந்தனூரில் கார் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். அரவக்குறிச்சி ஒன்றியம் வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம் நந்தனூரை சேர்ந்தவர் அன்பழகன்(55), சலவைத் தொழிலாளி. இவர் தனது மகள் சுதா(38) உடன் மொபட்டில் நந்தனூரிலிருந்து வெஞ்சமாங்கூடலூருக்கு வேலை விஷயமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து நந்தனூர் சென்று கொண்டிருந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மகள் சுதா படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>