நெல்லையில் பிப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நெல்லை, பிப். 17: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில்  பிப்ரவரி - 2021 மாதத்திற்கான  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 19ம் தேதி 3வது வெள்ளிக்கிழமை எனது தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடக்கும் இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>