பைக் மோதி மூதாட்டி பலி

கடையம், பிப். 17: கடையம் அருகே பூசைத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவரது மனைவி கமலம் (65). இருவரும் முக்கூடலில் உறவினர் வீட்டு வளைகாப்புக்கு பைக்கில் சென்றனர். மாதாபுரத்தை கடந்து எறப்பனை பாலம் ஏறி இறங்கிய போது பள்ளத்தில் பைக் நிலை தடுமாறியபோது பின்னால் வந்த வடகரையைச் சேர்ந்த முகம்மதுயூசுப் மகன் பதூர்தீன் (20) என்பவரது பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்த கமலத்தை தென்காசி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.   பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>