ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் மாவட்ட கிரிக்கெட் போட்டி

தென்காசி, பிப்.17: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூரில் ஏ.கே. கிரிக்கெட் கிளப் சார்பில் 18 அணிகள் பங்குபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. திமுக மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமை வகித்து கிரிக்கெட் போட்டிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் ஒருங்கிணைப்பாளர் பிலால், துணை ஒருங்கிணைப்பாளர் அரபாத் முன்னிலையில் வழங்கி போட்டியை துவக்கி வைத்தார்.இதில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் விஸ்வா சுல்தான், வார்டு செயலாளர்கள்    மணி, தம்பு, அமீரக திமுக ஹசன், வஹாப், பிலால், மூப்பன் இஸ்மாயில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மன்ற கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காளிராஜ், செங்கோட்டை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் லியோன், புதூர் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ், தகவல் தொழில்நுட்ப அணி கற்குடி சுரேஷ், வக்கீல் புதுக்குடி மாரியப்பன், பிலால், அரபாத், அனைத்து அணிகளின் கேப்டன்கள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு மார்ச் 1ம்தேதி பரிசுகளை திமுக மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் வழங்குகிறார்.

Related Stories:

>