நெல்லை வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

வள்ளியூர், பிப். 17: நெல்லை மாவட்டத்துக்கு நாளை (18ம்தேதி) வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், வள்ளியூரில் நடந்தது. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். இதுபோல் களக்காட்டிலும் வடக்கு ஒன்றியம், நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏக்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், ஜெ.பேரவை இணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட பஞ். முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் (களக்காடு வடக்கு) பூவரசன், (தெற்கு) ஜெயராமன், நகர செயலாளர் செல்வராஜ், டோனாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நம்பி, மகளிரணி செயலாளர் அருணா, காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வள்ளியூர்,  களக்காட்டிற்கு நாளை வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக  வரவேற்பு அளிப்பது, 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை கிராமங்கள் தோறும்  நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, சட்டமன்ற தேர்தலில் அதிமுக  வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக உழைப்பது என்பது  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. களக்காட்டில் வடக்கு ஒன்றிய  அதிமுக அலுவலகத்தையும் மாவட்ட செயலாளர் கணேசராஜா திறந்து வைத்தார்.

Related Stories:

>