×

ரூ.18.55 லட்சத்தில் சிமென்ட் தளம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பணகுடி, பிப்.17: காவல்கிணறு, பெருங்குடியில் ரூ.18.55 லட்சத்தில் சிமென்ட் தளம், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார் ராதாபுரம் தொகுதி காவல்கிணறு ஊராட்சி தெற்கு பெருங்குடி கிழக்கு மற்றும் மேற்கு தெருவில் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், மயான சாலையில் சிமென்ட் தளம் அமைக்க ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலைகள், சிமென்ட் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், வள்ளியூர் நகர துணைச்செயலாளர் கல்யாணசுந்தரம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தீபக் நாகதுரை, இணைச்செயலாளர் முருகன், காவை பாலன், கிளை செயலாளர்கள் வீரப்பா, ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், நிர்வாகிகள் சின்னான், மகாராஜன், கணேசன் உள்பட பலர் பங்ேகற்றனர்.

Tags : Inbathurai MLA ,Paver Block Road ,
× RELATED பேவர் பிளாக் சாலைக்கு பூமி பூஜை