திருவில்லிபுத்தூரில் கல்லாதோருக்கு பிப்.28ல் தேர்வு

திருவில்லிபுத்தூர், பிப். 17: திருவில்லிபுத்தூரில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கான அடிப்படை எழுத்து தேர்வு பிப்.28ம் தேதி 73 மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.கல்வி அலுவலர்கள் சீனிவாசன், விஜயலட்சுமி தலைமை தாங்கினர். மூத்த ஆசிரிய பயிற்றுநர் கணேஷ்வரி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வேணி முன்னிலை வகித்து கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்காக, மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் சிறப்பு பள்ளிசாரா- வயது வந்தோர் கல்வித்திட்டம் 2019-2020ல் தொடங்கப்பட்டது.

இதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 73 மையங்களில் தலா 40 பேர் கற்று வருகின்றனர். இவர்களுக்கு பிப்.28ம் தேதி அந்தந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது’ என்றார். ஏற்பாடுகளை அபியான் திட்ட மேற்பார்வையாளர் மாடசாமி செய்து வருகிறார்.

Related Stories:

>