×

முன்னேற விளையும் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வு மத்திய அரசு தொடர்பு அலுவலர் தகவல்

விருதுநகர், பிப். 17: விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மத்திய அரசின் தொடர்பு அலுவலர் ஜெயா தலைமையில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் ‘முன்னேற விளையும் மாவட்டம்’ தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களிடம் மத்திய அரசு தொடர்பு அலுவலர் ஜெயா கூறியதாவது: இந்தியாவில் பின்தங்கிய 117 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உடல்நலம், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 47 இனங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் முன்னேற விளையும் மாவட்டங்களில் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளும் அளவீடு எடுக்கப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு 3 முறை முதன்மையாக தேர்வாகி, ரூ.3 கோடி ஊக்கத்தொகை பெற்றுள்ளது. ஊக்கத்தொகை வரைவு நிதிக்கான திட்டம் ‘நிதி ஆயோக்’கிடம் வழங்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்கள் முக்கியத்துடன் கண்காணிக்கப்படுகிறது. வீடுகளில் இருந்த குழந்தைகள் பிறப்பை மருத்துவமனைகளில் உறுதிப்படுத்தி உள்ளோம். 47 பிரிவுகளில் பலவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதிகாரிகள் சொல்வதை பார்த்தால் முன்னேறி இருப்பது போல் தெரிகிறது. மேலும் 2017-18ல் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 987 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், முன்னேற விளையும் மாவட்ட திட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1006 ஆக உயர்ந்துள்ளது. பெண் குழந்தைகள் கல்வியிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : districts ,children ,Liaison Officer ,Government ,
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில்...