தேனி ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணி தீவிரம்

தேனி, பிப். 17: தேனியில் ரயில் நிலைய கட்டுமானப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போடியில் இருந்து மதுரை வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகலரயில் பாதையாக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மதுரையிலிருந்து போடி வரை ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இது தவிர மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரையிலும் ரயில் தண்டவாளங்கள், ரயில் மேம்பாலங்கள், ரயில் நிலையங்கள் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலும், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி ரயில் நிலையம் வரையிலும் சுமார் 58 கி.மீ. தூரத்திதிற்கு சோதனை ரயில் ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஆண்டிபட்டியில் இருந்து போடி வரை ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், மூன்றாம் கட்டமாக வருகிற மே மாதம் ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை சோதனை ரெயில் ஓட்டம் நடத்தவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்குள் மதுரையிலிருந்து போடி வரை பணிகள் முடிக்கப்பட்டு முழுமையான ரயில் சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போது தேனியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில், ரயில் நிலைய கட்டுமானப் பணிகளின் இறுதிகட்டப் பணிகளும், ரயில் தண்டவாளம் இறுதிகட்டப்பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முழுமடைந்து சோதனை ரயில் ஓட்டம் நடக்கும் என தேனி பகுதி மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>