விபத்தில் காயமடைந்த வாலிபர் பரிதாப சாவு

சிங்கம்புணரி, பிப்.17 : சிங்கம்புணரி அருகே பாலத்தில் டூவீலர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். மதுரை மாவட்டம், நாட்டார்மங்களத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகேஷ்வரன்(16). இவர்கண்ணமங்கலபட்டியை சேர்ந்த மணி மகன் ராமகிருஷ்ணன்(18), முருகேசன் மகன் மலைச்சாமி(17) ஆகியோருடன் டூவீலரில் சிங்கம்புணரி அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க சென்றார். டூவீலரை லோகேஷ்வரன் ஓட்டினார். அணைக்கரைப்பட்டி பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பாலத்தின் சுவர் மீது மோதியது.  இதில் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து  மதுரையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>