×

தொண்டியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கப்படுமா?

தொண்டி, பிப்.17: தொண்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தொண்டி பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் மகாசக்திபுரம், புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே தொண்டியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட பகுதிகளின் தண்ணீர் பிரச்சனையை சரி செய்து விடலாம். இது குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொண்டி தமுமுக தலைவர் காதர் கூறுகையில், தொண்டியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Tondi ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்