×

எமனேஸ்வரத்தில் வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, பிப்.17: வீட்டுமனை ஒதுக்க கோரி மருத்துவ சமூக  சங்கத்தினர் பரமக்குடியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ சமூக மக்கள் உள்ளனர். இவர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் தமிழக அரசால் பரமக்குடி குரூப் வேந்தோணி கால்வாய் அருகில் வீட்டு மனை கட்டுவதற்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு, அந்த இடத்தை அரசு கல்லூரி கட்டுவதற்கு  எடுத்துக் கொண்டது. இதற்காக  தற்போது வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால் மிகவும் வறுமையில் வாடும் அந்த சமூகத்தினர் வீட்டுமனை இன்றி தவித்து வருகின்றனர். இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்ததற்கு பதிலாக, மாற்று  இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு, பரமக்குடி எமனேஸ்வரம் மருத்துவ சமூக சங்கம் சார்பில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பூமிநாதன் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பதிவாளரும், திமுக பிரமுகருமான பாலு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மகளிரணி நிர்வாகிகள் தனலட்சுமி, செல்வி, திவ்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு பரமக்குடி தாசில்தார் செந்தில் வேல்முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்