×

அதிமுகவினருக்கு பணம் கொடுத்தால் மட்டுமே நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு


மதுரை, பிப்.17: நெல் கொள்முதல் மையங்களை திறக்க கோரி விவசாயிகள் நேற்று நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அதிகாரிகள் கதவை திறக்க மறுத்ததால், விவசாயிகள் கொந்தளித்தனர். ஆளுங்கட்சியினருக்கு பணம் கொடுத்தால் மட்டுமே மையங்கள் திறக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய், நிலையூர் கால்வாய் உள்ளிட்டவை மூலம் 1.40 லட்சம் ஏக்கர் நெல்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை ஆகும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக சம்பந்தப்பட்ட ஊர்களில் கொள்முதல் மையம் அமைத்து, நெல்லின் ஈரப்பதத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும்.
தற்போது, மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும், அறுவடை நடந்து வருகிறது.

Tags : opening ,paddy procurement centers ,superintendents ,siege ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு