×

அவுட்சோர்ஸ்சிங் தேர்வுக்கு எதிர்ப்பு ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.17: மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வக நுட்பனர்கள் அவுட்சோர்ஸ்சிங் முறையில் தேர்வு செய்யப்படுவர் என அரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பனகல் ரோட்டில் உள்ள இந்திய மருத்துவச் சங்க அலுவலகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ ஆய்வக நுட்பனர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறும்போது, ‘‘11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வக நுட்பனர்கள் அவுட்சோர்ஸிங் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆய்வக நுட்பனர்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், உழைப்பை சுரண்டும் வகையில் ரூ.10 ஆயிரம் மட்டும் ஊதியம் வழங்கப்படும். எனவே அவுட்சோர்ஸ்சிங் முறையில் ஆய்வக நுட்பனர்கள் தேர்வு செய்யக் கூடாது’’ என்றார்.

Tags : Laboratory technicians ,
× RELATED புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக...