×

மதுரையில் 21 மையங்களில் கொரோனா தடுப்பூசி

மதுரை, பிப்.17: மதுரை மாவட்டத்தில் 21 கொரோனா தடுப்பூசி மையங்களில் நேற்று 1,153 பேர் முதல் முறையாகவும், 231 பேர் இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டு வந்தன. கடந்த 15ம் தேதி முதல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளும் முன்களப் பணியாளர்களுக்குப் போடப்படுகின்றன. அந்தவகையில் பிப்.15ல் 4 பேருக்கும், நேற்று 18 பேருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று முதல் உசிலம்பட்டி தாலுகா மருத்துவமனையிலும் கோவாக்சின் தடுப்பூசிகள் போட மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Corona ,centers ,Madurai ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!