×

பாஸ்டேக் முறைக்கு எதிர்ப்பு கப்பலூர் டோல்கேட்டை வாகன ஓட்டிகள் முற்றுகை

திருமங்கலம், பிப். 17: நாடு முழுவதும் நேற்று முதல் பாஸ்டேக் இல்லாமல், டோல்கேட்டினை கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள டோல்கேட்டிலும் நேற்று முதல் பாஸ்டேக் அமலானது. திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் இலவச அனுமதியை டோல்கேட் நிர்வாகம் வழங்கியது. இதன்படி திருமங்கலம் உள்ளூர் வாகனங்கள் 10 மற்றும் 1ம் எண் டோல்கேட் வழியாக சென்று வந்தன. நேற்று பாஸ்டேக் கட்டணம் அமலானதை தொடர்ந்து திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் செலுத்தவேண்டும் என டோல்கேட் நிர்வாகம் வற்புறுத்தியது. இதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு டோல்கேட்டினை முற்றுகையிட்டனர். வழக்கம் போல் இலவசமாகவே டோல்கேட்டினை கடக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது டோல்கேட் ஊழியர்களுக்கும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமங்கலம் டவுன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் முற்றுகை கைவிடப்பட்டது.

Tags : Motorists ,protest ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...