குண்டாஸில் 2 பேர் கைது

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக கலையரசனை, அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (34), வன்னியபாரைபட்டியை சேர்ந்த சொக்கன் (28) ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் எஸ்பி ரவளிபிரியா இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் அய்யப்பன், சொக்கனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More