திண்டுக்கல்லில் திருமண ஆசைவார்த்தை கூறி இன்ஜினியரிங் மாணவி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

திண்டுக்கல், பிப். 17: திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (21). இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. அதன்பின் சூர்யா திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி 8 மாத கர்ப்பிணியானர். இதையறிந்த சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை அழைத்து கொண்டு திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டு வந்தார். இதற்கிடையே மகளை காணவில்லை என அவரது பெற்றோர் தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தனர். எஸ்ஐ முத்தமிழ்ச்செல்வி வழக்குப்பதிந்து மாணவியை தேடி வந்த நிலையில், அவர் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. திருப்பூர் சென்ற போலீசார் மாணவியை மீட்டு தாடிக்கொ ம்பு அழைத்து வந்து விசாரணை செய்ததில், சூர் யா தன்னை திருமணம் செய்து செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் சூர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>