ஆன்லைன் விளையாட்டால் குழந்தைகளுக்கு ஆபத்து எஸ்பி எச்சரிக்கை

திண்டுக்கல், பிப். 17: இணையதள பாதுகாப்பு தினத்தையொட்டி பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து கொள்வது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கொரோனா காலம் என்பதால் பெரும்பாலும் இணையவழி கல்வியே பயன்பாட்டில் உள்ளது. இதில் குழந்தைகள் எவருக்கும் தெரியமால் நடக்கின்ற குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெற்றோர்கள் தேவையற்ற பதிவுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதோடு வங்கி கணக்கு குறியீட்டு எண், ஏடிஎம். எண்ணை பகிர கூடாது என்றும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும். குழந்தைகள் இணையதள விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் அறிவு, கல்வி, திறமை, உடல்நலன் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான சூழலும் உருவாகி விடுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தவர்களை கணினி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பட்டுள்ளனர்..சமீபத்தில் சாணார்பட்டி அருகே சேர் சாட் மூலமாக இணையதள குற்றத்தில் ஈடுபட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் கொலை, கொள்ளை, திருட்டு, காணமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், திருட்டு ஆகியவற்றில் 350 வழக்குகளில் 500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் போலீசாரை அணுகலாம்’ என்றார்.

Related Stories:

>