×

மாவட்டத்தில் 23 தாசில்தார்கள் இடமாற்றம்

சேலம், பிப். 17:சேலம் மாவட்டத்தில் 23 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் ெசய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட வருவாய் அலகில், தாசில்தார் நிலையில் பணிபுரிந்து வந்த 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தாசில்தாராக இருந்த வெங்கடேசன் கெங்கவல்லிக்கும், சங்ககிரி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் மாணிக்கம் வாழப்பாடி தாசில்தாராகவும், ஆத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்  ஜெயந்தி ஆத்தூர் தாசில்தாராகவும், சேலம் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் தமிழரசி பெத்தநாய்க்கன்பாளையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், வாழப்பாடி தனி தாசில்தார் பொன்னுசாமி ஏற்காட்டிற்கும், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மாதேஸ்வரன் சேலம் மேற்கு தாசில்தாராகவும், அங்கிருந்த ரமேஷ்குமார் வாழப்பாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ஆத்தூர் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் சிராஜூதின் சேலம் தேர்தல் தாசில்தாராகவும், ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன், ஆத்தூர் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், விமான நிலைய விரிவாக்க தனி தாசில்தார் அறிவுடைநம்பி சேலம் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கிருந்த முத்துலட்சுமி தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாராகவும், அங்கிருந்த கணேஷ்குமார் சேலம் பறக்கும் படை தாசில்தாராகவும், அப்பொறுப்பில் இருந்த வாசுகி இடைப்பாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கிருந்த செல்வகுமார் சங்ககிரி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும், வாழப்பாடியில் இருந்த ஜானகி சேலம் மேற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ராஜேஷ்குமார் பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல்,  ஏற்காடு தாசில்தார் ரமணி கூடுதல் கோட்ட கலால் அலுவலராகவும், அங்கிருந்த கோவிந்தராஜன் சேலம் மேற்கு டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும், டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வள்ளிதேவி சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சேலம் ஆர்பிட்ரேசன் தனி தாசில்தார் விஸ்வநாதன் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், சங்ககிரி கோட்ட கலால் அலுவலர் பாலகிருஷ்ணன் மேட்டூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் வேலாயுதம் சங்ககிரி கோட்ட கலால் அலுவலராகவும், ஆத்தூர் வன எல்லை நிர்ணய அலுவலர் முருகைய்யன் ஆத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : dasildars ,district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...