பாலமலையில் திடீர் தீ வனவிலங்குகள், மூலிகை செடிகள் அழியும் அபாயம்

மேட்டூர், பிப்.17: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் பாலமலை அமைந்துள்ளது. அடர்ந்த இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் உள்ளன. மேலும், வன விலங்குகள் மற்றும் பறவைகளும் வசித்து வருகின்றன. இந்நிலையில், கோடை தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், பல்வேறு இடங்களில் செடி கொடிகள் காய்ந்து அடிக்கடி வனப்பகுதியில் தீப்பற்றி எரிகிறது. இந்நிலையில் நேற்று மேட்டூர் பொன்நகர் அருகே தீப்பற்றி எரியத்தொடங்கியது.

இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் தீயணைப்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பச்சை செடிகள் மற்றும் மரஇலைகளை கொண்டு தீயை அணைத்துள்ளனர். மேட்டூர் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே, தீ விபத்துக்களை தடுக்க முடியும். வனவிலங்கள், பறவைகள் மற்றும் அரியவகை மூலிகைகளை காப்பாற்ற முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: