டெல்லி: 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக உள்ளது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பாஜக அரசு திட்டம். அரசியலமைப்பை திருத்தி தொகுதி மறுவரையறை ஆணைய மசோதாவை இந்த வாரம் தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளோடு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஒத்திசைவு ஏற்படுத்த ஆலோசனை நடத்தினர். ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டப்படி தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 816ஆக உயரும். உயர்த்தப்பட்ட 816 தொகுதிகளில் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
திருத்திய தொகுதி மறுவரையறையின்படி பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தின் நாடாளுமன்ற பலம் 80லிருந்து 120ஆக உயர வாய்ப்பு உள்ளது. மராட்டியத்தில் நாடாளுமன்ற பலம் 48லிருந்து 72ஆகவும் பீகாரில் 40லிருந்து 60ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகள் 39லிருந்து 59ஆக உயர வாய்ப்பு. 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களில் பலம் கணிசமாக குறையும். உயர்த்தப்படும் 816 நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை புள்ளிவிவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகையுடைய வடமாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றாலே மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும் அபாயம். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். வட இந்தியாவில் தொகுதிகள் கணிசமாக உயரும் அதே நேரத்தில் தென் மாநிலங்களில் பெயரளவுக்கே தொகுதிகள் எண்ணிக்கை மாறும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பதாக மறுவரையறை அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள், தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர்.
1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் வலியுறுத்தல். 2011 அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் அதிக மக்கள்தொகை உள்ள வடமாநிலங்களுக்கு சாதகமாக அமையும். தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டு ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை நீட்டிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
