கள்ளச்சாராயம் விற்றவர் கைது

கெங்கவல்லி, பிப்.17: ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில், கெங்கவல்லி எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார், நேற்று கெங்கவல்லி பகுதியில் ரோந்து பணியை முடுக்கி விட்டனர். அப்போது, சாத்தப்பாடி மயானத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் அதே பகுதியைசட சேர்ந்த ராஜேந்திரன்(48) என்பதும், கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீசார், சாராயத்தை கைப்பற்றினர்.

Related Stories:

>