சேந்தமங்கலம், பிப்.17: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி புதூரில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில், ஆயிரக்கணக்கில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மழை காலங்களில் கொல்லிமலையில் இருந்து மழைநீர் பெரியாற்றின் வழியாக செல்கிறது. அடிவாரம் காரவள்ளியில் தடுப்பணை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும். சேந்தமங்கலம் தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளதால் விவசாயிகள் கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன் பெரும்போது விவசாயிகள் கேட்கக்கூடிய உரங்களை கூட்டுறவு வங்கியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளர்.