எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு

திருச்செங்கோடு, பிப்.17: திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையம் பகுதியில் டயர்கடை வைத்து நடத்தி வருபவர் தமிழரசு(37). இவர், கடந்த 13ம் தேதி வழக்கம்போல் கடையைப் பூட்டி சென்றுள்ளார். நேற்று கடைக்கு சென்றபோது, மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை திடுக்கிட்டார். இதுகுறித்து புகாரின்பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், ₹73 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>