×

தொழில் விரிவாக்கத்திற்கு நிதி உதவி விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

நாமக்கல், பிப்.17: நடுத்தர நிறுவனத்தினர் தொழில் விரிவாக்கம் செய்ய நிதி உதவிக்கு விண்ணப்பிபக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பால், இறைச்சி மற்றும் தீவனம் பதப்படுத்தும் அலகுகள் அமைக்கவும், தொழில் விரிவாக்கம் செய்ய நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர்,தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், முறையான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் விண்ணக்க வேண்டும். இத்திட்டத்தில், தகுதியின் அடிப்படையில்,மொத்த திட்ட மதிப்பீட்டில், 90 சதவீதம் வரை வங்கி கடன் பெறும் வசதி உள்ளது.

நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது,சிறு குறு, நடுத்தர நிறுவனங்களாக இருப்பின், 10 முதல், 15 சதவீதம் வரை மற்றும் இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையை அணுகி, தேவையான விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...