×

கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

 

டெல்லி: மேற்காசிய போர் சூழல் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அப்போது; மேற்காசிய போரால் ஏற்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால தாக்கத்தை எதிர்கொள்ள தயார். என்ன விலை கொடுத்தாவது விவசாயிகளை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது. உள்நாட்டு எரிவாயு உற்பத்தியும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பும் அதிகரித்துள்ளது. கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும். ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் துணைநிற்க வேண்டும். மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்புகளை ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். மேற்காசிய போரால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi ,Delhi ,Narendra Modi ,West Asia ,West Asian war ,
× RELATED இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது...