தொழிலாளி தீக்குளித்து சாவு

கிருஷ்ணகிரி, பிப்.17: கெலமங்கலம்  அருகே தடிக்கல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). கூலி தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சக்திவேலுக்கு மதுஅருந்தும்  பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.

கடந்த 8ம் தேதி மீண்டும் தகராறு  ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை  உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், உடல் கருகி படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். இதுகுறித்து  கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் விசாரித்து வருகிறார்.

Related Stories:

>