சென்னை: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா 23.03.2026 முதல் 01.04.2026 வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின் வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
25.03.2026 அன்று காலை 06.00 Hrs அதிகாரநந்தி திருவிழாவும், 29.03.2026 அன்று காலை 06.00 Hrs தேரோட்டமும், 30.03.2026 அன்று மதியம் 14.30 Hrs அறுபத்துமூவர் உற்சவமும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாக்களை முன்னிட்டு, ஒவ்வொரு உற்சவமும் தொடங்கும் நேரம் முதல், அந்தந்த நிகழ்வுகள் நிறைவடையும் வரை பக்தர்களின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்துத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
மேற்கண்ட நாட்களில் கீழ்கண்டவாறு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

1. இராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ் லஸ் சர்ச் ரோடு. டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி,ராமசாமி சாலை,ஆர்.எ.புரம் இரண்டாவது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு,சென்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.
2. அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக இராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு,வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு,கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர்,பி.எஸ் சிவசாமி சாலை,இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
3. ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை,பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு,விவேகானந்தர் கல்லூரி ,இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
4. மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
வாகன நிறுத்த தடை;
25.03.2026 அதிகாரநந்தி திருவிழா 29.03.2026 தேர்திருவிழா அன்றும் 30.03.2026 அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, இராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.
அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
1. கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மைலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).
2. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் இரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 100 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்).
3. செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் P.S. பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ( 300 இரு சக்கர வாகனம் மற்றும் 50 கார்).
4. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (150 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்).
