×

வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஓசூரில் வீடுகள் ஒதுக்கியதில் ஊழல்

ஓசூர், பிப்.17: ஓசூரில், வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓசூர் திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனிநபர் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு எந்த ஒதுக்கீடுகளையும் பின்பற்றாமல்  இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் முன்கூட்டியே சிலருக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளளர். டிசம்பர் மாதம் வணிக வளாக கடைகளை ஒதுக்கீடு செய்ய நடந்த குலுக்கலில் பலகோடி முறைகேடு நடந்துள்ளது.

200க்கும் மேற்பட்ட வீடுகளுக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த குலுக்கலும் வெளிப்படையாக நடத்தப்படவில்லை. இதனால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி, பொதுமக்கள் முன் வெளிப்படையாக குலுக்கலை நடத்த வேண்டும்.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் 19ம் தேதி வீட்டு வசதி வாரியம் முன் போராட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சி அமைந்த உடன் ஊழலில் ஈடுபட்டு கோடிகளை சுருட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

Tags : houses ,Hosur ,Housing Board ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு