கடத்தூர் பகுதியில் ஸ்பின்னிங் மில் அமைக்க நடவடிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.17: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியில், “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு, விவசாயிகளிடையே கலந்துரையாடினார். இதில், விவசாயிகள் பேசுகையில், இப்பகுதியில் கூட்டுறவு மரவள்ளி ஆலை ஒன்று அமைத்து தர வேண்டும். பொம்மிடி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 5000 வழங்க வேண்டும். சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கடத்தூர்: கடத்தூர் அருகே ராமியணஹள்ளியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில், கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இப்பகுதியில் அதிகளவு பருத்தி விளைவதால், ஸ்பின்னிங் மில் தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை மக்கள் முன் வைத்தனர். திமுக ஆட்சி அமைந்தவுடன், ஸ்டாலின் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என கனிமொழி எம்பி உறுதியளித்தார்.

கடத்தூரில் நடந்த வணிகர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். எனவே, ஜிஎஸ்டி உச்சவரம்பை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

அரூர்: அரூர் தொகுதியில், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” நிகழ்ச்சியில் பங்கேற்று கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். முன்னதாக கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து தீர்த்தமலை, அரூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் பேசுகையில், இப்பகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எனவே, வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் இப்பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கனிமொழி எம்.பி. பிரசார நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், மாவட்ட பொறுப்பாளர்கள் கீரை விசுவநாதன், ராஜேந்திரன், பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், சென்னகிருஷ்ணன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் அரூர் வடக்கு வேடம்மாள், மேற்கு சவுந்தரராஜன், கிழக்கு சந்திரமோகன், நகர பொறுப்பாளர் மோகன், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், கோபால், வெங்கடேசன், மேகன் சின்னத்தம்பி, லோகேஷ், தமிழ்செல்வி ரங்கநாதன், இக்பால், சேட்டு, கமலக்கண்ணன், அஸ்கர் அகமத்,  பொறுப்பாளர்கள் அரூர் அன்பழகன், திருமால்செல்வன், பூங்கொடி, வாசுதேவன், நேரு,  ஒன்றிய செயலாளர் தனபால் மற்றும் தனேந்திரன், பாவலன் மாதுசேகர், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ராஜா, பத்மாவதி சரவணன், விஜயாசங்கர், அமுதா ஆதிமூலம், காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்மணி லெனின், பூதநத்தம் ஒன்றியக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், நகர செயலாளர் கேஸ் மணி, மாவட்ட வணிகரணி அமைப்பாளர் சிவப்பிரகாசம், செயலாளர் முத்துசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: