ஆம்னி வேன் பைக் மோதல்: ஒருவர் பலி

வெள்ளக்கோவில், பிப். 17: வெள்ளக்கோவில் அடுத்துள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் தனபால்(23) பிட்டர், மகேந்திரன்(26) எலட்டீசியன், இருவரும் ஆம்னி வேனுக்கு எரிவாயு நிரப்ப நேற்று வெள்ளக்கோவில் கோவை சாலை வேலப்பகவுண்டம்பாளையம் அருகே கேஸ் பங்கிற்கு செல்ல திரும்பியுள்ளனர். அப்போது வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓரத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்( 23), தொழிலாளி, ராசு,22, நிஜாந்,22, மூவரும்  பைக்கில் காங்கயம் செல்ல ஆம்னி வேன் பின்னால் வந்துள்ளனர்.  

வேன் வலது பக்கம் எரிவாயு நிரப்ப திருப்பும்போது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வேன் உருண்டது. பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கம் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படனர். இதில் பைக்கில் பயணம் செய்த மகேந்திரன் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். மற்ற 4 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெள்ளக்கோவில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>