ஊட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஊட்டி, பிப். 17: ஊட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக., அலுவலகமான, கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் சதகத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரும் 19ம் தேதி மேட்டுப்பாளையத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கபட்டது.

இதில் மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், ராமன், மகேஷ், ராமன், சோலூர் பேரூர் செயலாளர் பிரகாஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள் குண்டன், செல்வன், பெள்ளன், ஆசைதம்பி உட்பட ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் பசவன் நன்றி கூறினார்.

Related Stories:

>