நியூயார்க்: நியூயார்க்கில் ஏர் கனடா விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் லா கார்டியா விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11. 40 மணியளவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தின் 4வது ஓடு பாதையில் விமானம் தரையிறங்கியபோது விமான நிலைய ஆணையத்தின் விமான மீட்பு மற்றும் தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளனது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஜாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தின்போது விமானத்தில் 72 பயணிகளும் நான்கு விமான ஊழியர்களும் இருந்ததாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
