கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க.வினர் நோட்டீஸ் விநியோகம்

தொண்டாமுத்தூர், பிப்.17:  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் நடக்கிறது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களிடம் புகார் மனுக்களை பெறுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான நோட்டீஸ் விநியோகிக்கும் நிகழ்ச்சி கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று நடைபெற்றது. கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி நோட்டீஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், ஒன்றிய துணைத் தலைவர் எம்.ஆர்.ஆர். பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி மற்றும் தினேஷ், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>