×

டாக்டர் என்.ஜி .பி தொழில்நுட்ப கல்லூரிக்கு ஏ ப்ளஸ் அங்கீகாரம்

கோவை, பிப். 17:  அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இயங்கி வரும் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு தரமான கல்வி சேவைகளை வழங்கி வருவதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார சபை (என்.ஏ.ஏ.சி.) ஏ ப்ளஸ் தரச்சான்று வழங்கியுள்ளது. இதனால் மற்ற சுயநிதிக்  கல்லூரிகளின் வரிசையில் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்துள்ளது.

இந்த தரச்சான்று பெற்றமைக்காக கல்லூரியின் முதல்வர் பொற்குமரன், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் பழனிசாமி, செயலர் தவமணி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags : Dr. ,NGP College of Technology ,
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே