ஓடாநிலை அருகே நொய்யல் காயர் குழுமம் திறப்பு

மொடக்குறிச்சி, பிப். 17:   ஓடாநிலை அருகே நொய்யல் காயர் குழுமத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், அரச்சலூர் அடுத்த ஓடாநிலை அருகே உள்ள தம்பிரான் வலசில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நொய்யல் காயர் குழுமத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மொடக்குறிச்சி எம்எல்ஏ., சிவசுப்பிரமணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.

பின்னர் நொய்யல் குழுமத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காயர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தனசேகரன், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பேட்டை சின்னு, குளூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ், அவல்பூந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் சண்முகசுந்தரம், சிந்தாமணி கூட்டுறவு இயக்குனர் செந்தில்குமார், கொடுமுடி ஒன்றியக்குழு உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>