வாஷிங்டன் : மேற்கு ஆசிய போர்க்களத்தில் மேலும் 5,000 வீரர்களை குவித்துள்ளது அமெரிக்க ராணுவம். ஈரான் உடனான போரை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில் மரைன்ஸ் எனப்படும் உயர் பயிற்சி பெற்ற படை குவிக்கப்பட்டது. F35 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் ஆகியவையும் மேற்கு ஆசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையையும் கர்க் தீவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
