தி.நகரில் பட்டப்பகலில் துணிகரம்: பிரபல நகைக்கடை மேலாளர் வீட்டில் 30 சவரன் கொள்ளை

சென்னை: தி.நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (45). பிரபல நகைக்கடையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். மனைவி அன்னபூரணி மற்றும் 2 பிள்ளைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் வசித்து வருகிறார். இவரது மனைவி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (45), தனியார் வங்கி ஊழியர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்  மகளின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சொந்த ஊரான செஞ்சிக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்து நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ₹1 லட்சம் மற்றும் 3 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

Related Stories:

>