விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம்

சென்னை: பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா 1  லட்சம் வழங்க  முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மீஞ்சூர் அரியன்வாயல் கிராமத்தை சேர்ந்த நாகூர் மீரான் ஹூசைன் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

பூந்தமல்லி வட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா மின்கம்பம் உடைந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதேபோல், சென்னை, தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>