டெம்போ கவிழ்ந்து தொழிலாளி பலி

திருவள்ளூர்: ஆவடி வீராபுரம் அருகே அக்கரம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிய கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ புறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வெள்ளவேடு அடுத்த காவல்சேரி 400 அடி பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக டெம்போவின் பிளேட் உடைந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுப்பிரமணி(55) என்ற தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், 10 பேர் காயமடைந்தனர்.

Related Stories:

>