×

அரவக்குறிச்சியில் இரவில் கடும் பனிப்பொழிவு பகலில் வெயில் அதிகரிப்பு

அரவக்குறிச்சி, பிப். 16: அரவக்குறிச்சி பகுதியில் இரவில் கடும் பனி பொழிவு, பகலில் கடும் வெயில் என்று வித்தியாசமான சூழல் நிலவுகின்றது. இதனால் பனி மற்றும் வெயில் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி மாத இறுதியில் பனிக்காலம் முடிவடைந்து கோடைகால வெயில் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி 2 வது வாரத்திலும் கடும் பனி பொழிவு உள்ளது. கடந்த மாதங்களில் புயலின் காரணமாக மழை பெய்தது. இதனால் பூமி ஈரப்பதமாகவே இருந்தது. இதனால் தினசரி அதிகாலை ஆரம்பிக்கும் பனி காலை 9 மணி வரை மிக அதிகமாகவே இருந்தது. காலையில் பால், காய்கறிகளை டூவீலர்களில் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், அதிகாலையிலேயே வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்டோர் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக குளிரில் நடுங்கியபடி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்து அவதிப்படுகின்றனர். இந்த கடும் பனியின் காரணமாக பனிக்கால நோய்களான காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட நோய்களால் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இந்த பனியிலிருந்து தப்பிப்பதற்கு பாதுகாப்பு மாற்று வழியாக ஸ்வெட்டர், காதுகளைப் பாதுகாக்கும் உல்லன், தலைக்கவசம் உள்ளிட்ட பனிக்கால ஆடைகளை பொதுமக்கள் அணிந்து செல்கின்றனர். இரவு நேரத்திலும் அதிகாலையிலும் கடும் பனியின் தாக்கம் அதிகமாகவும், மதியம் 12 மணிக்கு மேல் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது.  இதனால் அரவக்குறிச்சி பகுதியில் பகலில் கடும் வெயில், இரவில் கடும் பனி பொழிவு என்று ஒரு நாளில் இருவேறு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகின்றது. இதனால் பனி மற்றும் வெயில் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து அவதிப்படுகின்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...